Tuesday, October 2, 2012

மன நோய்கள்

 
 
மனம்
மனம் என்னும் உணர்வு உடல் தரும்  உணர்வு நிலை நாம் அனைவரும் உணர்ந்ததே.
மனம் என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
ஆனால் இந்த மனம் என்பது நம்முடைய உடல்களில் பெரியது என்பது நாம் அறியாத ஒன்று .மனம் என்னும் உடல் சரிர  உடல் போல நம் கண்களுக்கு தெரியாது  . சூட்சும அணுக்களால் ஆனது .
ஆனால் முளை  என்ற உறுப்பு இதற்கு தொடர்புடையது என்பது நமக்கு தெரியும் . இந்த முளை நம் மனதின் இருப்பிடம் என்றும்     மனம் என்னும் உடலின் hardware என்று தற்போது நினைத்துக்கொள்ளலாம் .மனம் என்பது ஆன்மாவின் நுண்ணிய கருவி என்று பிராணிக் ஹீலிங் மாஸ்டர் சோவா கோக் சூயி தன் புத்தகங்களில் எழுதியுள்ளார் .இந்த மனம் வயிற்ருப்பகுதியில் மையம் கொண்டு 12  அடி  விட்டம் கொண்ட பந்து போல நம்மை சூழ்ந்து உள்ளது. 
எண்ணங்கள் மனதில் உருவாகும் சக்தி வடிவங்கள் .மனம் 2  பகுதிகளாக பிரிக்கப்படுகிறது .மன  ஆராய்ச்சியாளர்கள் அதை உணர்வு மனம் ,ஆழ்      உணர்வு மனம்  என்று சொல்கின்றனர் .10 % உணர்வு மனம் ,90 % ஆழ் உணர்வு மனம்  .ஆழ் மனதில் தேங்கி இருக்கும் பல எண்ணங்கள் ஒருவருடைய குணமாகவும், ஆற்றலாகவும் ,நோயாகவும் ,பலமாகவும் ,பலவீனமாகவும் வெளிப்படும் . இதன்  தன்மை  கொண்டே ஒருவருடைய  வாழ்க்கை  நிர்ணயிக்கப்படுகிறது  என்பது உண்மை .
மனதில் உண்டாகும் எதிர்மறையான எண்ணங்கள் நம் ஒளி உடலில் சக்தி எடுக்கும் தன்மையை மாற்றி விடுகின்றன . சக்கரங்கள் முலம்   உறுப்புகளுக்கு கொண்டு செல்லும் எனர்ஜி  குறைந்து    நோய் உருவாக காரணமாய் அமைகிறது    .     
சொரியாசிஸ் ,அரிப்பு ,ஆஸ்த்துமா ,தண்ணீர் பயம் ,ஆகாய விமானத்தில் பறக்க பயம் ,உயரமான இடத்தல் இருந்து கீழே பார்க்க பயம்,பாம்பு ,நாய் ,பூனை,புழு ,இரத்தம் பார்க்க பயம் ,தனியாக  அறையில்  இருக்க பயம் ,,மரண பயம் இப்படி பலவித காரணமற்ற பயங்கள்.
அதிக உடல் பருமன் உண்டாக ,ஏதோ நோய் இருப்பது போன்று நினைத்து பல மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபடுவது ,தூக்கமின்மை ,ஆண்மை இல்லாமை ,உடலுறவு செய்ய முடியாது என்று நினைப்பது, குழந்தை பிறக்காது என்று கவலை பட்டு மன அழுத்தம் அடைவது ,யாரோ தன்னை பார்ப்பது, பேசுவது , குறை சொல்வது, திட்டுவது போல உணர்வது போன்ற பல இந்த மனதில் உண்டாகும் பாதிப்பான ,இணக்கமற்ற எண்ணங்களால் உண்டாகின்றன .             
   . மனதில் உருவாகும் எதிர்மறையான   எண்ணங்கள் குறைய  யோகா ,தியானம் போன்றவை உதவும். இதுவே மனதில் ஆழமாக பதிந்து மன அழுத்தத்தை உருவாக்கும் பொழுது பிராணிக் ஹிலிங் ,ஹிப்னோதெரபி சிகிச்சைகள் உதவியாக இருக்கும்.
இப்படி ஆராயும் பொழுது நம் வாழ்வில் உண்டாகும் எந்த தவிப்புக்கும்,நோய்க்கும்,பலவீனத்துக்கும் ,பத்துக்கும்,சுகமின்மைக்கும் ,கவலைக்கும்  ,   படிப்பு,  ஜாபகம் , மனப்பாடம்  செய்யும்  திறமை, தைரியமாக செயல்கள் செய்ய , உறவுகள் மேம்பட ,சகஜமாக வாழ ,கூச்சமின்றி  மக்களுடன் பழக  இப்படி எதற்குமே ,எல்லாவற்றிற்குமே தீர்வு இந்த மனம் சார்ந்த்த சிகிச்சைகள் .      
இப்படி மனிதனின் ஆரோகியத்துக்கு 3 உடல்களின் தன்மையை ஆராய்ந்தது தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் .இதை விடுத்து அனைத்துக்கும்  ஒரு   முறையான   மருத்துவம் சிறப்பு என்று நினைத்து நாட்களை வீணாக்கி உடல் நலனை தொலைத்து நோயில் மடிவதை   இனி கை  விட வேண்டும் .நம் நாட்டின் பாரம்பரிய கலைகளான சூட்சும சிகிச்சைகள் , ஆன்மிக அறிவு இவற்றை   நம் சொந்தமாக்கி   வளமான வாழ்வு வாழ்வோமாக .

No comments:

Post a Comment