முதலில் உங்கள் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது என்று ஆராய்ந்து உணருங்கள்.
- சரீர நோய்கள் -
- பிராண உடல் நோய்கள்-
சூட்சும அணுக்களால் ஆனது .
பிரபஞ்ச சக்தி என்னும் சக்தி குமிழ்கள் நாம் உட்கொள்ளும் உணவு, தண்ணீர் ,பிராண வாயு இவற்றுடன் சேர்ந்து நம் திசுக்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாகின்றது .இதை பிராண சக்தி என்றும் கூறுவர் .இந்த சக்தியை உடலுக்கு அதிகம் எடுக்கும் முறையான பயிற்சியாக பிரணயாமம் கடைபிடிக்கப்படுகிறது .இது பல நோய்களுக்கும் ,மன அழுத்தம் நிங்கவும் உதவுவதை நம்மில் பலர் அனுபவித்திருக்கிறோம் .
இந்த சக்தியை நம் உடலுக்கு எடுத்துக்கொடுக்கும் வேலையை சக்கரங்களும் ஒளி உடலும் செய்கின்றன .நலமுடன் நம் உடலும் மனமும் இயங்க ஒளி உடலின் ஆரோக்கியம் அவசியம் என்பது இனி நமக்கு புரியும் .
சக்கரங்கள் ,நாடிகள் ஆரா இவற்றில் உண்டாகும் சக்தி மண்டல மாற்றத்தால் வரும் நோய்கள். தலைவலி, அடிக்கடி வயிறு பிரட்டி மலம் கழிப்பது ,வாந்தி,கால் எரிச்சல் ,தலை சுற்றல் ,தூக்கமின்மை ,பயம் ,கண் எரிச்சல் ,தொண்டை வலி ,தொண்டை வரட்சி ,படபப்பு ,ரத்தக் கொதிப்பு, தலை நடுக்கம் ,ஆண்மை குறைவு , பெண்களின் செக்ஸ் குறைபாடுகள் ,குழந்தை இன்மை ,விந்தணு குறைபாடு ,அடிக்கடி கரு கலைதல் , திடிரென்று பேச இயலாமை ,நடுக்கம் போன்ற நோய்கள் வர சக்கரங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணம் .இவற்றை மருந்து மாத்திரைகளால் சரி செய்ய முடியாது .இந்த நோய்கள் நாள்பட இருந்தால் அவை சரீர உடலிலும் நிரந்தர நோய்களுக்கான மாற்றத்தை உண்டாக்கும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே முறையான பிராணிக் ஹீலிங் சிகிச்சை முலம் குணப்படுத்தலாம் . மற்ற எனர்ஜி சிகிச்சைகளான அக்குபங்க்சர் ,வர்மா ,யோகா ,பிராணயாமா போன்றவை ஓரளவுக்கு நலம் கொடுக்கும்.
ஒளி உடலில் எந்த அளவு பாதிப்பு உண்டு என்று கண்டு பிடிக்க கிர்லியன் kirlian போட்டோ உதவும் .சக்கரங்கள் ,உறுப்புகள் ,மண்டலங்கள் எந்த அளவு சக்தி தேக்கி வைத்திருக்கின்றன என்பதும் எந்த அளவு சக்தியை உபயோகிக்கின்றன என்பதும் இந்த பரிசோதனையில் தெரியும் .இந்த டெஸ்ட் ஒரு health horoscope -என்னும் உடல் நலத்திற்கான ஜாதகம் என்றே சொல்லலாம் .ஒவ்வருவரும் இந்த டெஸ்ட் எடுத்து தன் உடல் சக்தி சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்வது நல்லது .
இந்த எனர்ஜி உடல் சக்கரங்கள் இவற்றை நம் முன்னோர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை பின்வரும் பேச்சு வழக்கைக் கொண்டு அறியலாம் .
1 . இவன் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடுகிறான் - மூலாதாரா சக்கரம் கட்டுப்பாடில்லாமல் இயங்குகிறது என்று அர்த்தம் .
2. வயற்றில் பட்டம் பூச்சி பறக்கிறது .வயிறு பிரட்டுகிறது .இவை வயிற்றுப்பகுதியில் உள்ள சக்கரங்கள் பயத்தில் அதிகம் சுழல்வதை உணர்த்துகிறது.
3 .இவன் தலை கனம் பிடித்து திரிகிறான் .ஒருவருடைய கர்வத்தால் அவருடைய தலை சக்கரங்கள் அதிகம் சக்தியை தேக்கி வைத்து அந்த நபரை மற்றவர்களை மதித்து புரிந்து அன்புடன் நடந்து கொல்லாத நிலையில் வாழ வைப்பது.
4. குழந்தை நலங்கி விட்டது .வாந்தி ,பேதி,காரணமில்லாமல் வரும் காய்ச்சல் ,பயந்த மாதிரி வெறித்து பார்க்கும் குணம் ,உடல் எடை மடமடவென குறைவது ,துங்காமல் அழுதுகொண்டே இருப்பது ,எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சல் ,சளி ,எந்த டெஸ்ட் பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாத உடல் நலக்குறைவு ,போன்றவை இந்த ஒளி உடல் மாற்றத்தால் வருபவை . உடனே அதற்கு சிறகடித்து ,திருநீர் பிடித்து ,மந்திரித்து கயிறு கட்டவேண்டும் .இல்லை என்றால் அது நோயாக உடலில் பற்றிக்கொள்ளும் . குழந்தை பிறந்த வீடு , கரு கலைந்த பெண் உள்ள வீடு ,மரணம் நிகழ்ந்த வீடு ,நோய் கண்ட ஒருவர் உள்ள வீடு ,மயானம் ,மருத்துவமனை , என்று பல இடங்களுக்கு குழந்தைகளை கொண்டு செல்வதை பழங்காலத்தில் தவிர்க்க சொன்னது நினைவிருக்கும். இவை எல்லாமே இளம் குழந்தையின் உடலில் உள்ள சக்தி மண்டலம் எளிதில் பாதிக்கப்படும் என்ற காரணத்தினாலேயே கடைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு முறைகள் .
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.இன்று முதல் நீங்களும் உங்கள் குடும்ப வழக்கில் உள்ள வாக்குகளை ஆராய்ந்தது மகிழலாம் .ஒரு சொல் விளையாட்டாக இதை மற்றவர்களுடன் பகிர்ந்தது புரிய வைக்கலாம் .
இந்த நோய்களுக்கு பிராணிக் ஹீலிங் முலம் நிரந்தர ஆரோக்கியத்தை பெறலாம்.ஒளி உடல் ,சக்கரங்கள் இவற்றில் ஏற்படும் நோய்களுக்கு பிராணிக் ஹிலிங் விஞ்ஞான அடிப்படியில் ஆராய்ந்தது முறையாக எந்த ரகசியமும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்று .
No comments:
Post a Comment