Tuesday, October 2, 2012

மனிதனின் உடல்கள் 3-பாகம் -1

மனிதனின் உடல்கள்   3 .
அவை-
1. நம் கண்களால் பார்க்கும் சரீரம்
2. நம் உணர்வால் அறியும் ஒளி உடல்.ஆரா,பிராண உடல் என்றும் சொல்லுவார்கள்.
3. நம் அனைத்து இயக்கத்திற்கும் காரணமான மனம்.
மனிதன் தான் அனுபவிக்கும் அனைத்து கஷ்டங்களுக்கும் ,நோய்களுக்கும் தன் சரீரமே காரணம் என்று நம்பி கண்களால் பார்த்து விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகளையே நாடி ஓய்ந்து கவலைக்குள்ளாகிறான். பல வியாதிகள் மனதிலிரிந்து ஆரம்பிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றை உளவழி உடல் நோய்கள்-psychosomatic disorders என்று பெயரிட்டுள்ளனர்.
இவற்றை மருந்துகளால் மட்டும் குணப்படுத்த முடியாது. மாத்திரை,மருந்து,ஊசி,அறுவை சிகிச்சை,மசாஜ்,எண்ணை குளியல்,மண் சிகிச்சை,வர்மா ,தொடு சிகிச்சை,அக்கு பங்சர், ஹீலிங், உளவியல் சிகிச்சை ஆலோசனை போன்ற பல முறைகளை தனித்தனியே செய்து பலன் கிடைக்காமல் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை தானே மருத்துவர் ஆகியிருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கத்தில் வாழும் அன்பர் கோடி.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று யார் எதை சொன்னாலும் ஒரு கை பார்த்து விட மனம் தயார் .இந்த ஒரு பிறவியில் இனிமையாக வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது?
அந்த ஆசை தீர இன்று ஒரு வழி சொல்கிறேன்.

1 comment:

  1. SlotsCity Casino – New Member Bonus of 100% up to - Mapyro
    Read 이천 출장안마 our review of SlotsCity Casino - 하남 출장샵 new member 부산광역 출장마사지 bonus. Get 100% up to 계룡 출장마사지 £/€/£ 100 Bonus + 100 Free 경기도 출장안마 Spins.

    ReplyDelete